காத்திருப்பு போராட்டத்தால் தாமதமாக நடந்த ஜமாபந்தி

சீர்காழியில் காத்திருப்பு போராட்டத்தால் ஜமாபந்தி நிகழ்ச்சி தாமதமாக நடந்தது.

Update: 2023-06-07 18:45 GMT

சீர்காழி:

சீர்காழியில் காத்திருப்பு போராட்டத்தால் ஜமாபந்தி நிகழ்ச்சி தாமதமாக நடந்தது.

ஜமாபந்தி

சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் நேற்று மதியம் தாமதமாக ஜமாபந்தி நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு உதவி கலெக்டர் அர்ச்சனா தலைமை தாங்கினார். தாசில்தார் செந்தில்குமார் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் மாதிரவேலூர், வடரங்கம், அகர எலத்தூர், கீழமாத்தூர், அத்தியூர், ஓலையாம் புத்தூர், கோபால சமுத்திரம், புத்தூர் ஆகிய 10 வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதில் திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனை பட்டா, புதிய குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பம் செய்தல், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்ட மனுக்களை பொதுமக்களிடம் இருந்து உதவி கலெக்டர் அர்ச்சனா பெற்றுக்கொண்டார்.

தகுதியான மனுக்கள்

பின்னர் அவர் தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அரசு சார்பில் வழங்கி பேசுகையில், பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களை உடனுக்குடன் பரிசீலனை செய்து தகுதியான மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் இருக்கும் அரசு திருமையிலாடி, கூத்தியம் பேட்டை, அகனி, நிம்மேலி, வள்ளுவக்குடி, கொண்டல் ஆகிய வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மனுக்களை கொடுத்து பயன்பெறலாம் என்றார்.

குத்தாலம்

இதேபோல் குத்தாலம் தாசில்தார் அலுவலகத்தில், தாசில்தார் இந்துமதி தலைமையில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் சண்முகம், குடிமை பொருள் வழங்கல் தனி தாசில்தார் பிரான்சுவா, மயிலாடுதுறை பேரிடர் மேலாண்மை தனி தாசில்தார் காந்திமதி, மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு அழைப்பாளராக மயிலாடுதுறை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அம்பிகாபதி கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.

அப்போது தலைமை இடத்து துணை தாசில்தார் பாபு, மண்டல துணை தாசில்தார் ராஜன், சென்னை கன்னியாகுமரி தொழிற்தட சாலை நிலை எடுப்பு தனி தாசில்தார் சுந்தரம், நில அளவை பிரிவு வட்ட துணை ஆய்வாளர் சபரிநாதன், வருவாய் ஆய்வாளர்கள் பாலமுருகன், ஜெயந்தி, சர்மிளா, கிராம நிர்வாக அதிகாரிகள் ராஜ்மோகன், சண்முகம் மற்றும் பிற துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்