அமைச்சர் கே.என்.நேருவுக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து - சென்னை ஐகோர்ட்டு
முன்னாள் அமைச்சர் வேலுமணி குறித்து பேசியதாக அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.
சென்னை,
கடந்த 2020-ம் ஆண்டில் கோவையில் முன்னாள் அமைச்சர் வேலுமணி புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக அமைச்சர் கே.என்.நேரு மீது கோவை கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் அந்த வழக்கை ரத்து செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதில் நேருவின் பேச்சு அமைச்சரின் பணி குறித்து அவதூறு பரப்பும் வகையில் இல்லை என்றும், வேலுமணியின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் கருத்தும் இல்லை என தெரிவித்தும் சென்னை ஐகோர்ட்டு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.