செந்நாய்கள் கடித்து மான் பலி
போடி அருகே செந்நாய்கள் கடித்து மான் பலியானது.
போடி அருகே உள்ள பிச்சாங்கரை பகுதியில் யானை ஓடை அருகே சாலையில் காயங்களுடன் மான் குட்டி ஒன்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதை கண்ட அப்பகுதி விவசாயிகள் உடனே வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் மானை மீட்டனர். பின்னர் கால்நடை டாக்டர்கள் வரவழைக்கப்பட்டு பரிசோதனை செய்த போது அது ஏற்கனவே இறந்து விட்டது தெரியவந்தது. அந்த மான் குட்டி செந்நாய்கள் கடித்ததில் காயம் அடைந்து இறந்ததாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.