வேலூர் கோட்டையில் மின்விளக்குகளால் அலங்காரம்
வேலூர் கோட்டையில் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் நடந்த ஜி-20 உச்சி மாநாட்டில் ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், வேலூர் கோட்டை, தஞ்சை பெரிய கோவில் உள்பட நாடு முழுவதும் 100 நினைவுச் சின்னங்களை ஜி-20 லோகோவால் ஒளிரச் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி வேலூர் கோட்டையில் நேற்று மின்விளக்குகளால் புரஜெக்டர் கருவி மூலம் ஜி-20 லோகோ மின் விளக்குகளால் ஒளிரவிடப்பட்டது. இதை பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர். சிலர் செல்போனில் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.