அழுகிய நிலையில் ஓடையில் வாலிபர் பிணம்

கலசபாக்கம் அருகே அழுகிய நிலையில் ஓடையில் வாலிபர் பிணம்

Update: 2022-07-26 16:27 GMT

கலசபாக்கம்

கலசபாக்கம் ஒன்றியம் கடலாடி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட மேல்சோழங்குப்பம் பூங்காவனத்தம்மன் கோவில் ஓடை பாலத்தின் கீழ் இன்று தண்ணீரில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணம் கவிழ்ந்த நிலையில் கிடந்தது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கடலாடி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வாலிபரின் பிணத்ைத தூக்கியபோது உடல் முழுவதும் அழுகிய நிலையில் இருந்தது. மேலும் இறந்து துர்நாற்றம் வீசியது.

இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்த நபர் யார்? எந்த ஊர்? என்பது தெரியவில்லை.

முன்விரோதம் காரணமாக யாராவது அடித்து கொலை செய்து போட்டுவிட்டு சென்று உள்ளார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்