பெண்ணுக்கு கொலை மிரட்டல்; தாய்-மகன் மீது வழக்கு
மானூர் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த தாய்-மகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.;
மானூர்:
மானூர் அருகே கீழ பிள்ளையார்குளம் குறிச்சி நகரைச் சேர்ந்தவர் கணபதி மகன் சசி கண்ணன் (வயது 24). இவர் பிளஸ்-2 மாணவியை கேலி கிண்டல் செய்ததாகவும், அதனை மாணவியின் தாயார் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. சம்பவத்தன்று சசி கண்ணன், அவருடைய தாயார் முத்துமாரி ஆகிய 2 பேரும் பிளஸ்-2 மாணவியின் வீட்டுக்கு சென்று, மாணவியின் தாயாரை அவதூறாக பேசி, கொலைமிரட்டல் விடுத்தனர். இதுகுறித்த புகாரின்பேரில், சசி கண்ணன், முத்துமாரி ஆகிய 2 பேர் மீது மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.