சங்கராபுரம் அருகே கடனை திருப்பி கேட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல்: தாய், மகள் உள்பட 2 பேர் மீது வழக்கு
சங்கராபுரம் அருகே கொடுத்த கடனை திருப்பி கேட்ட பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த தாய், மகள் உள்பட 2 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சங்கராபுரம்,
சங்கராபுரம் அருகே உள்ள தேவபாண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் கமருதீன் மனைவி ஜரினாபீ (வயது 51). இவரிடம் உறவினரான தியாகதுருகம் அன்சர் மனைவி சலிமா (42) என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு குடும்ப செலவுக்காக ரூ.10 லட்சம் கடன் வாங்கியதாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று ஜரினாபீ போன் மூலம் சலிமாவிடம் வாங்கிய கடனை திருப்பி தருமாறு கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சலிமா மற்றும் அவரது மகள் நிஷா ஆகியோர் தேவபாண்டலம் வந்து ஜரினாபீயை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் சலீமா, நிஷா ஆகியோர் மீது சங்கராபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.