பெண்ணுக்கு கொலை மிரட்டல்

பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த எலக்ட்ரீசியன் கைது.;

Update:2023-03-26 00:30 IST


திண்டுக்கல் அருகே உள்ள மாரம்பாடியை சேர்ந்தவர் ஜேசுதாஸ் (வயது 45). எலக்ட்ரீசியன். இவர் சாணார்பட்டி அருகே புங்கம்பாடியை சேர்ந்த உறவுக்கார பெண்ணுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு ஆபாசமாக பேசியுள்ளார். மேலும் அவருக்கு ஜேசுதாஸ் கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து சாணார்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விக்டோரியா வழக்குப்பதிவு செய்து ஜேசுதாசை கைது செய்தார்


Tags:    

மேலும் செய்திகள்