பெண்ணுக்கு கொலை மிரட்டல்
பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்.
ஊட்டி,
ஊட்டி தோப்பன் லைன் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். கூலித்தொழிலாளி. இவரது மனைவி கோகிலா (வயது 28). கோகிலா அவ்வப்போது காந்தல் பகுதியில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்று வருவார். அவர் அடிக்கடி சென்று வருவது, அண்ணன் அருண்குமார் (30) என்பவருக்கு பிடிக்கவில்லை. வீட்டுக்கு வருவது தொந்தரவாக உள்ளது என்று கூறியுள்ளார். இதனால் கோகிலாவுக்கும், அருண்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
இந்தநிலையில் நேற்று கோகிலா தாய் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அருண்குமார் இனிமேல் வீட்டுக்கு வந்தால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த கோகிலா இதுகுறித்து ஊட்டி மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பிலிப் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் வழக்குப்பதிவு செய்து, அருண்குமாரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரை ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.