பெண்ணுக்கு கொலை மிரட்டல்

பெண்ணுக்கு கொலை மிரட்டல்;

Update:2022-07-07 03:22 IST


களக்காடு:

களக்காடு அருகே உள்ள மஞ்சுவிளை காமராஜ்நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் தொழில் நிமித்தமாக தருவை லட்சுமி நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று காமராஜ்நகரில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக செல்வராஜ் தனது மனைவி சலோமி (40) மற்றும் குடும்பத்தினருடன் வந்திருந்தார். அப்போது அதே ஊரைச் சேர்ந்த அவரது உறவினர் பழனிராஜன் என்பவர் செல்வராஜ் வீட்டிற்கு வந்தார். அங்கு இருந்த சலோமியிடம் வீட்டை என்னிடம் தந்து விடுங்கள் என்று கூறி தகராறில் ஈடுபட்டு, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சலோமி களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி, பழனிராஜன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்