வாலிபருக்கு கொலை மிரட்டல்
பெரியகுளம் அருகே வாலிபருக்கு கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் அம்பேத்கர் காலனியை சேர்ந்தவர் செல்வம் (வயது 23). அதே பகுதியை சேர்ந்தவர் வேங்கையா. இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த மாதம் நடைபெற்ற கோவில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் முன்விரோதம் காரணமாக நேற்று முன்தினம் வேங்கையா, அவரது உறவினர்கள் சார்லஸ், பாண்டி, பாரத் ஆகிய 4 பேரும் சேர்ந்து செல்வத்தை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தென்கரை போலீசில் செல்வம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வேங்கையா உள்பட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.