நடிகையின் செல்போன் எண்ணை கேட்டு கேமராமேனுக்கு கொலை மிரட்டல் - போலீசில் புகார்
நடிகையின் செல்போன் எண்ணை கேட்டு கேமராமேனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.;
சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம், பாரதி சாலையை சேர்ந்தவர் பிரபு என்ற லட்சுமி பிரபாகர் (வயது 52). இவர், ராமாபுரம் போலீஸ் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-
நான், சினிமா துறையில் 30 வருடமாக கேமராமேனாக பணிபுரிந்து வருகிறேன். சூர்யா என்பவர் 2006-ம் ஆண்டு என்னை சந்தித்து பாரதியார் பாடல் ஒன்றை நடிகை பத்மபிரியாவை வைத்து ஒளிப்பதிவு செய்து தருமாறு கேட்டார். அதன்பேரில் நாங்கள் இருவரும் ஒன்றாக பணிபுரிந்து பாரதியார் பாடலை ஒளிப்பதிவு செய்து முடித்தோம்.
அதன்பிறகு சூர்யாவும், நானும் நண்பர்களாக பழகி வந்ே்தாம். இதற்கிடையில் சூர்யா, நடிகை பத்மபிரியாவின் செல்போன் எண்ணை தரும்படி கேட்டு கடந்த சில மாதங்களாக என்னிடம் தகராறு செய்து வருகிறார். நடிகையின் செல்போன் எண்ணை தராவிட்டால் எனது மனைவியை கற்பழித்து விடுவேன் எனவும், மேலும் தகாத வார்த்தைகளால் திட்டுவதுடன், கொலை மிரட்டலும் விடுத்து வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறி இருந்தார்.
அந்த புகார் மனுவின் மீது ராமாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.