விபத்தில் சிக்கிய வாலிபர் சாவு

சேலத்தில் விபத்தில் சிக்கிய வாலிபர் இறந்தார்.

Update: 2023-05-08 20:51 GMT

சேலம் அஸ்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரகதீஸ்வரன் (வயது 36). இவர், கடந்த 5-ந் தேதி விபத்தில் சிக்கினார். இதில், படுகாயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சில நாட்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இதனிடையே, வீட்டில் இருந்தபோது பிரகதீஸ்வரனுக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவரை குடும்பத்தினர் அங்குள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அஸ்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்