மரத்தில் கார் மோதி கணவர் சாவு - பெண் படுகாயம்

மரத்தில் கார் மோதி கணவர் இறந்தார். மனைவியும் படுகாயம் அடைந்தார்.

Update: 2023-03-16 18:45 GMT

காளையார்கோவில்

ராமநாதபுரம் மாவட்டம் வட்டாணம் அருகே உள்ள ஓடவயல் கிராமத்தை சேர்ந்தவர் ராமசுப்பு (வயது 47). இவர் காரில் தனது மனைவியுடன் நேற்று மதியம் மதுரை-தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் காளையார்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது புலியடிதம்மம் கிராமம் அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த பனைமரத்தில் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராமசுப்பு சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது மனைவி ராமஜெயம் (45) பலத்த காயங்களுடன் சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்து குறித்து காளையார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்