குட்டையில் மூழ்கி தொழிலாளி சாவு

தேன்கனிக்கோட்டை அருகே மீன் பிடிக்க சென்ற தொழிலாளி குட்டையில் மூழ்கி இறந்தார்.

Update: 2023-02-27 18:45 GMT

தேன்கனிக்கோட்டை

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கிருஸ்துபாளையம் கிராமத்தைச் சோந்தவர் முத்தப்பா (வயது 54). மீன் பிடிக்கும் தொழிலாளி. இவர் மனைவி அந்தோனிமேரியிடம் மீன் பிடிக்க செல்வதாக கூறி சென்றார். ஆனால் இரவு வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்தநிலையில் நேற்று மருதனப்பள்ளி அருகே புறம்போக்கு நிலத்தில் உள்ள குட்டையில் முத்தப்பா பிணமாக மிதந்தார். இது குறித்து அப்பகுதி மக்கள் தேன்கனிக்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்தப்பாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் அவரது உடலை குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது முத்தப்பா மீன் பிடிக்க சென்றபோது வலையில் சிக்கி குட்டையில் மூழ்கி இறந்தது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மீன் பிடிக்க சென்ற தொழிலாளி குட்டையில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்