அஞ்செட்டியில் பாம்பு கடித்து வாலிபர் பலி

Update:2022-09-22 00:15 IST

தேன்கனிக்கோட்டை:

அஞ்செட்டி அருகே உள்ள கேரட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராமன். இவருடைய மகன் பச்சப்பன் (வயது 24). இவர் அங்குள்ள விவசாய நிலத்தில் பூச்சி மருந்து தெளித்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது வலது காலில் பாம்பு கடித்தது. வலியால் துடித்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பலியானார். இதுகுறித்து அஞ்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்