விபத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் பலி
விபத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் பலியானார்.
மேலூர்,
மேலூர் அருகே மதுரை நான்கு வழி சாலையில் வெள்ளரிப் பட்டி என்னும் இடத்தில் தலைக்கவசம் அணிந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வாலிபர் மீது மதுரை நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் படுகாயமடைந்து சம்பவ இடத்தில் இறந்து போனார். இதுகுறித்து மேலூர் போலீசார் விசாரணை நடத்தியதில் விபத்தில் இறந்த வாலிபர் மதுரையில் உள்ள தனியார் டிரஸ்ட் ஆம்புலன்ஸ் டிரைவர் கிருபாகரன் (வயது30) என்பதும், இவர் அவரது சொந்த ஊரான துவரங்குறிச்சி அருகே உள்ள செவந்தாம்பட்டிக்கு சென்று விட்டு மதுரை திரும்பும் போது இந்த விபத்து நடந்தது தெரிய வந்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மேலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.