தேவூர் அருகேமொபட் விபத்தில் சைக்கிள் கடைக்காரர் சாவுமனைவியின் சேலை பின்பக்க சக்கரத்தில் சிக்கியதால் பரிதாபம்
தேவூர் அருகே மொபட் விபத்தில் சைக்கிள் கடைக்காரர் இறந்தார். மனைவியின் சேலை பின்பக்க சக்கரத்தில் சிக்கியதால் இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
தேவூர்
தேவூர் அருகே மொபட் விபத்தில் சைக்கிள் கடைக்காரர் இறந்தார். மனைவியின் சேலை பின்பக்க சக்கரத்தில் சிக்கியதால் இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
சைக்கிள் கடைக்காரர்
தேவூர் அருகே காவேரிபட்டி பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 58). இவருடைய மனைவி சாந்தி (43). சைக்கிள் கடைக்காரர். கணவன்- மனைவி இருவரும் நேற்று காவேரிப்பட்டியில் இருந்து எடப்பாடிக்கு மொபட்டில் சென்றனர். அரசிராமணி மூலப்பாதை பகுதியில் சென்ற போது சாந்தியின் சேலை மொபட்டின் பின்சக்கரத்தில் சிக்கியுள்ளது.
இதில் மொபட் கீழே சாய்ந்தது. கணவன்- மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். இதில் ரவிக்கு தலையின் பின்பக்கத்தில் காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் ரவியை மீட்டு எடப்பாடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஆஸ்பத்திரியில் சாவு
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ரவி பரிதாபமாக இறந்தார். சாந்தி லேசான காயத்துடன் தப்பினார். விபத்து குறித்து தேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மோட்டார் சைக்கிள், மொபட்டில் குடும்பத்தினருடன் செல்லும் பெண்கள் கவனக்குறைவாக இருப்பதால் பின்சக்கர சக்கரத்தில் சேலை, சுடிதார் சிக்கி அடிக்கடி விபத்து நடப்பதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.