மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலி

மோட்டார் சைக்கிள் மோதி பெண் பலியானர்.

Update: 2023-10-14 19:30 GMT

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை அடுத்த குன்னத்தூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் வெண்ணிலா (வயது 40). இவர் நேற்று முன்தினம் மாலை குன்னத்தூர் ஊராட்சி அலுவலகம் அருகே குன்னத்தூர்- காரப்பட்டு சாலையில் நடந்து சென்றார். அப்போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் வெண்ணிலா மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த வெண்ணிலா பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து சாமல்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்