குளத்தில் செத்து மிதந்த மீன்கள்

வேடசந்தூர் அருகே குளத்தில் கழிவுநீர் கலந்ததால் மீன்கள் செத்து மிதந்தது.;

Update:2022-08-01 23:20 IST

வேடசந்தூர் அருகே சுள்ளெறும்பு நால்ரோடு காலனி அருகே கெங்கன்குளம் உள்ளது. இந்த குளத்தில் அந்த பகுதியில் உள்ள ஆலையில் இருந்து கழிவுநீர் கலப்பதாக கூறப்படுகிறது. இதனால் அந்த குளத்தில் ஊர் பொதுமக்கள் சார்பில் விடப்பட்ட 100-க்கும் மேற்பட்ட மீன்குஞ்சுகள்  செத்து மிதந்தன. ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை சுத்தகரிப்பு செய்து வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்