போலீஸ்நிலையம் அருகே முதியவர் பிணம்
கன்னியாகுமரியில் போலீஸ்நிலையம் அருகே முதியவர் பிணம்
கன்னியாகுமரியில் போலீஸ் நிலையம் அருகே பழைய பஸ்நிலைய ரவுண்டானா சந்திப்பு பகுதி உள்ளது. இந்த சந்திப்பு பகுதியில் சாலையோரமாக சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீசார் விரைந்து வந்து முதியவரின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவர் கருப்பு நிற வேட்டியும், சட்டையும் அணிந்திருந்தார். அவர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை?. இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.