பாப்பாரப்பட்டி அருகே கால்வாயில் தவறி விழுந்து சிறுமி பலி

Update: 2022-12-06 18:45 GMT

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி அருகே உள்ள பூதிப்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன். கட்டிட மேஸ்திரி. இவருடைய மகள் கலைவாணி (வயது 17). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கலைவாணி நேற்று வீட்டின் அருகே உள்ள ஜெர்தலாவ் கால்வாயில் ஓடும் தண்ணீரை வேடிக்கை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கால்வாய்க்குள் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி பலியானார். இதுபற்றி தகவல் அறிந்த பாப்பாரப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கலைவாணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுமி பலியான சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்