பொம்மிடி அருகே கிணற்றில் தவறி விழுந்து ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் சாவு
பாப்பிரெட்டிப்பட்டி:
பொம்மிடியை அடுத்த கொப்பக்கரையை சேர்ந்தவர் ராமசாமி. இவருடைய மனைவி விஜயலட்சுமி (வயது 70). இவர் சத்துணவு அமைப்பாளராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு வெளியே சென்ற விஜயலட்சுமி பின்னர் வீடு திரும்பவில்லை.
இதையடுத்து அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது அதே ஊரை சேர்ந்த அந்தோணிசாமி என்பவரது விவசாய கிணற்றில் விஜயலட்சுமி இறந்த நிலையில் கிடந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொம்மிடி போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது கிணற்றில் தவறி விழுந்து விஜயலட்சுமி பலியானது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.