4 வது நாள் பாதயாத்திரை: பாரதத்தின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கிறதா...? ராகுல்காந்தி கேள்வி

ராகுகாந்தி இந்திய ஒற்றுமை யாத்திரை தமிழகத்தில் இன்றுடன் நிறைவு ; நாளை காலை கேரளா செல்கிறார்.

Update: 2022-09-10 07:45 GMT

சென்னை

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. 'பாரத் ஜோடோ யாத்ரா' என்ற பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தை கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3,570 கி.மீ. தூரம் 150 நாட்கள் பாதயாத்திரையை மேற்கொள்கிறார்.

இதற்கான தொடக்க விழா கடந்த 7-ந் தேதி கன்னியாகுமரியில் நடந்தது. நேற்று 3வது நாளாக ராகுல் காந்தி முத்தடிச்சான்பாறை சென்று ஓய்வு எடுத்தார். புலியூர்குறிச்சியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். தொடர்ந்து அவர் மாலை 4 மணிக்கு பயணத்தை மிளகுமூட்டில் முடித்து அங்கு தங்கினார்.

இன்று 4 வது நாள் பாதயாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி சிராயன்குழியில் தங்கி பின்னர் அவர் படந்தாலுமூட்டில் நிறைவு செய்கிறார். தொடர்ந்து அவர் நாளை காலை கேரளா செல்கிறார்.

4ம் நாள் இந்திய ஒற்றுமை நடைபயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து எம்பி ராகுல் காந்தி டுவிட் செய்து உள்ளார். அதில் நாட்டில் உள்ள இளைஞர்களில் 42 சதவீதம் பேர் பேர் வேலையில்லாமல் உள்ளனர்; பாரதத்தின் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்கிறதா?"என கேள்வி எழுப்பி உள்ளார்.



Tags:    

மேலும் செய்திகள்