சிவகங்கை அருகே நடைபெற இருந்த மஞ்சுவிரட்டு தேதி மாற்றம்

சிவகங்கை அருகே நடைபெற இருந்த மஞ்சுவிரட்டு தேதி மாற்றப்பட்டுள்ளது.;

Update:2023-03-04 00:15 IST


சிவகங்கையை அடுத்த டி.புதூர் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு இந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி வருகிற 5-ந் தேதி நடைபெறுவதாக இருந்தது.

இந்நிலையில் அன்றைய தினம் சிவகங்கை மாவட்டம் கீழடியில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை திறந்து வைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளார். இதையொட்டி கிராம கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 5-ந் தேதி நடைபெறுவதாக இருந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை வருகிற 12-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்