டாஸ்மாக் சூப்பர்வைசருக்கு கத்திக்குத்து
வீரபாண்டி அருகே டாஸ்மாக் சூப்பர்வைசரை கத்தியால் குத்திவிட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றனர்.
பூதிப்புரம் அருகே உள்ள ஆதிபட்டியை சேர்ந்தவர் கருப்பையா (வயது 54). டாஸ்மாக் சூப்பர்வைசர். இந்த நிலையில் வேலை முடிந்து, மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வீரபாண்டி அருகே உப்புக்கோட்டை -தேனி சாலையில் போடேந்திரபுரம் முனீஸ்வரன் கோவில் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், அவரை வழிமறித்து தகராறு செய்தனர். பின்னர் அவர்கள் கத்தியால் கருப்பையாவை குத்தி விட்டு, மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இது குறித்து கருப்பையா கொடுத்த புகாரின்பேரில் வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.