தச புஜ வீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு

மகாளய அமாவாசையையொட்டி தச புஜ வீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Update: 2023-10-14 18:45 GMT

பொறையாறு:

பொறையாறு அருகே அனந்தமங்கலம் கிராமத்தில் ராஜகோபால சாமி கோவிலில் அருள்பாலித்து வரும் திரிநேத்ர தச புஜ வீர ஆஞ்சநேயரை வழிபட்டால் சத்ரு உபாதைகள் கடன் தொல்லைகள் நீங்கி சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். திரிநேத்ர தசபுஜ வீர ஆஞ்சநேயர் 3 கண்களையும், பத்து கரங்களையும் உடையவர். சங்கு, சக்கரம், சூலம், கபாலம், மழு, பாசம், வில், அம்பு, சாட்டை, நவநீதம் ஆகியவற்றை கரங்களில் ஏந்தி முதுகின் இரு பக்கங்களிலும் கருடனுக்குரிய சிறகுகளோடு எழுந்தருளிக் காட்சி தருகின்றார். இதுபோன்ற ஆஞ்சநேயரின் திருமேனி இத்திருக் கோவிலில் மட்டுமே உள்ளது.  இங்குள்ள ஆஞ்சநேயரை வழிபட்டாலே சிவன், திருமால், பிரம்மா, ஸ்ரீராமர், இந்திரன், ருத்ரன், கருடாழ்வார் ஆகிய அனைவரையும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம். நேற்று மகாளய அமாவாசையை ஆஞ்சநேயருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனை வழிபாடுகள் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று ஆஞ்சநேயரைத் தரிசனம் செய்தனர். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை, துளசி மாலை, வடை மாலை, எலுமிச்சை பழ மாலை ஆகியவற்றை அணிவித்து பக்தர்கள் வழிபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்