ஆடி அமாவாசையையொட்டி குண்டாற்றில் தர்ப்பணம்

ஆடி அமாவாசையையொட்டி குண்டாற்றில் தர்ப்பணம் செய்தனர்.

Update: 2022-07-28 15:37 GMT

திருச்சுழி

முன்னோர்களுக்கு ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை அன்று சொந்த ஊரில் உள்ள ஏதாவது ஒரு கோவிலில் அல்லது வீட்டிலேயே தர்ப்பணம் செய்வது வழக்கம். அமாவாசை திதி மாதந்தோறும் வந்தாலும் ஆடி அமாவாசையன்று வரும் திதிக்கு அதிக சிறப்பு உண்டு. ஆடி அமாவாசை முன்னோர்களை நினைத்து பிதுர்தர்ப்பணம் செய்வதற்கு ஏற்ற காலமாக இருப்பதால் அன்றைய தினம் தந்தையை இழந்தவர்கள் புண்ணிய நதிகள், ஆறுகளில் நீராடி தர்பணம் செய்வர். இதன்படி திருச்சுழி குண்டாற்றில் முன்னோர்களுக்கு ஏராளமான மக்கள் திதி மற்றும் தர்பணம் செய்தனர். பின்னர் துணை மாலையம்மன், திருமேனி நாதர் கோவிலுக்கு சென்று தீபம் மற்றும் மோட்ச தீபம் ஏற்றி வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்