தனிநபர் எதிர்ப்பால் நடன நிகழ்ச்சி ரத்து

நாட்டறம்பள்ளி அருகே தனிநபர் எதிர்ப்பால் நடன நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

Update: 2023-09-23 17:15 GMT

நாட்டறம்பள்ளியை அடுத்த மல்லப்பள்ளி ஊராட்சி, ஏரியூர் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி நேற்று மாலை ஆடல், பாடல் நடன நிகழ்ச்சி நடத்த அனுமதி கேட்டு அப்பகுதி மக்கள் போலீஸ் அதிகாரிகளிடம் மனு அளித்தனர். அதன்படி ஏரியூர் கிராமத்தில் நேற்று மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நடன நிகழ்ச்சி நடத்திக் கொள்ள வாணியம்பாடி துணைபோலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் அனுமதி வழங்கினார். நடன நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்தனர். இந்தநிலையில் அதே பகுதியை சேர்ந்த தனிநபர் ஒருவர் நடன நிகழ்ச்சி நடத்தக்கூடாது என நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஆடல், பாடல் நடன நிகழ்ச்சி குழுவினர் மற்றும் இளைஞர்கள் வியாழக்கிழமை மாலை போலீஸ் நிலையத்தில் திரண்டனர்.

அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 7 மணி முதல் 10.30 மணி வரை போலீஸ் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஏரியூர் பகுதியில் நடன நாட்டிய நிகழ்ச்சி நடத்துவதில்லை என ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் சார்பாக எழுதி போலீஸ் நிலையத்தில் கொடுத்தனர். போலீஸ் நிலையத்தில் இரவில் பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்