சேதமடைந்த நூலக கட்டிடம்

கம்பத்தில் சேதமடைந்த அரசு நூலக கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-11-14 18:45 GMT

கம்பத்தில் அரசு கிளை நூலகம் 1956-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. சுமார் 40 ஆண்டுகள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தது. அதன்பின்னர் 1996-ம் ஆண்டு முதல் புதிய கட்டிடம் கட்டப்பட்டு கம்பம் அரசு மருத்துவமனை அருகே டி.எஸ்.கே. நகரில் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் சுமார் 54 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. மேலும் குழந்தைகளுக்கு சிறப்பு பிரிவும், கணினி பிரிவும் உள்ளது. அரசின் போட்டி தேர்வுகளுக்கு வாசகர் வட்டம் சார்பில் இலவச பயிற்சி மையமும் செயல்படுகிறது. தற்போது இந்த நூலக கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்து மழை நீர் புகுகிறது. நூலக கழிப்பறையும் சேதமடைந்து பயன்படுத்தாத நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சேதமடைந்த நூலக கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்