சேதமடைந்த சமுதாய கூடம்
தஞ்சை மாவட்டம், சேதமடைந்த சமுதாய கூடம் சீரமைக்கப்படுமா
தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு தாலுகா, திருமங்கலக்கோட்டை மேலையூர் இந்திரா நகரில் சமுதாய கூடம் உள்ளது. இந்த சமுதாயகூடம் கஜா புயலின் போது சேதமடைந்தது. மேலும், நுழைவு வாயிலில் கதவு இல்லாமல் உள்ளது. கதவு இல்லாத காரணத்தால் மதுபிரியர்கள் மது அருந்தும் கூடமாக பயன்படுத்தி வருகிறார்கள். எனவே, இந்த சமுதாய கூடத்தை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-இளங்கோவன், திருமங்கலக்கோட்டை.