பழுதடைந்த நீர்த்தேக்க தொட்டியை அதிகாரிகள் கவனிப்பார்களா?
அதிராம்பட்டினத்தில் பழுதடைந்த நீர்த்தேக்க தொட்டிக்கு பதில் புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிராம்பட்டினம்;
அதிராம்பட்டினத்தில் பழுதடைந்த நீர்த்தேக்க தொட்டிக்கு பதில் புதிய நீர்த்தேக்க தொட்டி கட்டித்தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பழுதடைந்த நீர்த்தேக்க தொட்டி
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில் பிள்ளையார் கோவில் தெரு உள்ளது. இப்பகுதியில் உள்ள மன்னப்பன் குளம் அருகில் நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தற்போது இந்த நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் இந்த தொட்டியில் ஏற்றப்படும் தண்ணீர் கசிந்து வீணாகி வருகிறது. இந்த நீர்த்தேக்க தொட்டியில் உள்ள தண்ணீரை மட்டுமே சுப்பிரமணியர் கோவில் தெரு, ஆப்பகார தெரு, பிள்ளைமார் தெரு உள்ளிட்ட பகுதியில் உள்ள மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
புதிய நீர்த்தேக்க தொட்டி
இந்தநிலையில் குறைந்த கொள்ளளவு உள்ள இந்த தொட்டி இப்பகுதியிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் போதுமானதாக இல்லை. மேலும் இதில் ஏற்றப்படும் தண்ணீரும் நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்ததால் அதிக அளவில் கசிந்து வீணாகி விடுகிறது. எனவே கூடுதல் கொள்ளளவு உள்ள புதிய நீர்த்தேக்க தொட்டியை இதே இடத்தில் கட்டித்தர வேண்டும் என இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.