அமராவதி ஆறு மேம்பாலத்தில் நடைமேடை சேதம்
அமராவதி ஆறு மேம்பாலத்தில் நடைமேடை சேதமடைந்துள்ளது. இதனை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமராவதி ஆறு
கரூர் மாவட்ட மக்களின் தேவைகளையும், திருப்பூர் மாவட்ட மக்களின் தேவைகளையும் ஒருசேர பூர்த்தி செய்யும் அமராவதி ஆறானது கரூர் மாவட்டம், திருமுக்கூடலூர் என்ற இடத்தில் காவிரியில் கலந்து விடுகிறது. கரூர் நகரின் வழியாக அமராவதி ஆறு செல்கிறது.இதில் கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையின் அமராவதி ஆறு குறுக்கிடும் இடத்தில் மேம்பாலம் கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மேம்பாலத்தின் இருபுறமும் நடைமேடை அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் கோரிக்கை
இந்நிலையில் நடைமேடையின் சிலாப்புகள் உடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் நடந்து செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். ஆகவே முக்கிய மேம்பாலத்தில் உடைந்துள்ள நடைமேடையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பார்வையிட்டு நடைமேடையை சீரமைத்த தர தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என பொதுக்கள் எதிர்பார்க்கின்றனர்.