தீயில் கருகி கரும்பு பயிர் சேதம்

மூங்கில்துறைப்பட்டில் தீயில் கருகி கரும்பு பயிர் சேதம்

Update: 2023-07-31 18:45 GMT

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் ஜனார்த்தனன் மகன் கோகுல்(வயது 41). இவருக்கு சொந்தமான கரும்பு வயல் நேற்று மதியம் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுபற்றிய தகவல் அறிந்து வந்த கோகுல் அப்பகுதி மக்கள் உதவியுடன் தீயை அணைத்தார். தீ விபத்துக்கான காரணம் குறித்து மூங்கில்துறைப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் அப்பகுதிகளில் விவசாய நிலங்கள் வழியாக செல்லும் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்வதால் காற்று வீசும்போது அவை ஒன்றோடொன்று உரசி அதில் இருந்து பறந்து விழும் தீப்பொறிகள் மூலம் பயிர்கள் தீப்பிடித்து எரிந்து சேதம் ஆவது அவ்வப்போது நிகழ்ந்து வருவதாகவும், எனவே தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் ஒன்றோடொன்று உராய்வு ஏற்படாத வகையில் அமைக்க மின்சாரம் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்