வழிகாட்ட வழியின்றி நிற்கும் அறிவிப்பு பலகை
கும்பகோணத்தில் வழிகாட்ட வழியின்றி நிற்கும் அறிவிப்பு பலகை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
கும்பகோணம்;
கோவில் நகரான கும்பகோணத்துக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டம், மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனர். அவர்களின் வசதிக்காக கும்பகோணத்தில் உள்ள சாலைகளில் ஊர் பெயர் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. அதன்படி தாராசுரம் காய்கறி மார்க்கெட் அருகே சாலையிலும் வைக்கப்பட்டது. ஆனால் தற்போது அந்த கம்பத்தில் இருந்த ஊர் பெயர் மற்றும் தகவல் சேதமடைந்து வழிகாட்ட வழியின்றி ஊர்பெயர் அறிவிப்பு பலகை உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஊர்பெயர் பலகையை சீரமைக்க வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் கோரிக்கையாகும்.