முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 134 அடியாக உயர்வு

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழை எதிரொலியாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 134 அடியாக உயர்ந்தது.

Update: 2022-08-01 17:17 GMT

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது. இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 133.25 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், தொடர் மழை காரணமாக இன்று 134.20 அடியாக உயர்ந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,806 கன அடியாக காணப்பட்டது. வெளியேற்றம் வினாடிக்கு 1,667 கன அடியாக உள்ளது.

இதேபோல் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- பெரியாறு 1, தேக்கடி 50.8, கூடலூர் 10.8, உத்தமபாளையம் 17.6, வீரபாண்டி 68, வைகை அணை 66.8, மஞ்சளாறு 58, சோத்துப்பாறை 28, ஆண்டிப்பட்டி 60.8, அரண்மனைபுதூர் 39, போடி 21.6, பெரியகுளம் 34. 

Tags:    

மேலும் செய்திகள்