தர்மபுரி அருகே தும்பலஅள்ளி அணை கால்வாயில் உடைப்பு

Update: 2022-10-15 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி அருகே உள்ள தும்பலஅள்ளி அணையில் இருந்து ஜம்பேரி அணைக்கட்டுக்கு கால்வாய் மூலம் தண்ணீர் செல்கிறது. இங்கிருந்து அரியகுளம் ஏரி உள்பட 15 ஏரிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தும்பலஅள்ளி அணையில் இருந்து ஜம்பேரி அணைக்கட்டுக்கு தண்ணீர் செல்லும் கால்வாயை மர்ம நபர்கள் உடைத்தனர். இதனால் 15 ஏரிகளுக்கு தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டது. இதையடுத்து கால்வாயை மர்ம நபர்கள் உடைத்த பகுதியை மண் மூட்டைகளை அடுக்கி விவசாயிகள் சீரமைத்தனர். இந்தநிலையில் இந்த மண் மூட்டைகளை அகற்றி மீண்டும் கால்வாய் உடைக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதனை அறிந்த கோவிந்தசாமி எம்.எல்.ஏ. அரியகுளம் பகுதிக்கு சென்றார். அங்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் உடைக்கப்பட்ட கால்வாயை சீரமைக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். 

மேலும் செய்திகள்