தூய்மை பணியாளர்களுக்கு தினக்கூலி ரூ.721 வழங்க வேண்டும்

வேலூர் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தினக்கூலி ரூ.721 வழங்க வேண்டும் என மனுகொடுத்தனர்.

Update: 2023-04-26 18:50 GMT

பகுஜன் சமாஜ் தூய்மை தொழிலாளர்கள் மற்றும் பொது தொழிலாளர்கள் சங்கம் வேலூர் சார்பில் பொதுச்செயலாளர் பெருமாள் தலைமையில் நிர்வாகிகள் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கோரிக்கை மனு அளித்தனர். அதில், வேலூர் மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் கடந்த 6 முதல் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த முறையில் தினக்கூலியாக பணியாற்றி வருகிறார்கள். தினமும் 8 மணி நேரத்துக்கும் மேலாக பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளர்களுக்கு 2023-24-ம் ஆண்டிற்கான தினக்கூலி ரூ.721 வழங்க வேண்டும் என்று கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார். ஆனால் ஒப்பந்ததாரர்கள் அதனை வழங்காமல் குறைவான கூலியை தற்போது வழங்குகிறார்கள். மேலும் வருங்கால வைப்புநிதி, மருத்துவ செலவுக்கான நிதியை சரியாக செலுத்தாமல் ஏமாற்றி வருகின்றனர். இதனை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தினக்கூலி ரூ.721 வழங்கவும், வருங்கால வைப்புநிதி, மருத்துவ செலவுக்கான நிதியை சரியாக வங்கிக்கணக்கில் செலுத்தவும் கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்