'தினத்தந்தி' செய்தி எதிரொலி: மீனாட்சிபுரம் மேம்பாலத்தில் தடுப்புச்சுவர் புதுப்பிப்பு

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக மீனாட்சிபுரம் மேம்பாலத்தில் தடுப்புச்சுவர் புதுப்பிக்கப்பட்டது.

Update: 2022-12-01 18:45 GMT

எட்டயபுரம்:

விளாத்திகுளத்திலிருந்து குளத்தூர் செல்லும் சாலையில் மீனாட்சிபுரம் ஓடையின் மீது மேம்பாலம் உள்ளது. இந்த பாலத்தின் இருபுறமும் பக்கவாட்டு தடுப்புச் சுவர்கள் சிதைந்து கம்பிகள் வெளியே நீட்டிக் கொண்டு இருந்தன. இதனால் இந்த பாலத்தில் விபத்து அபாயம் இருந்து வந்தது. இதுகுறித்து 'தினத்தந்தி' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டு, விரைவாக பக்கவாட்டு சுவர்களை கட்டி விபத்து அபாயத்தை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க சுட்டிக் காட்டப்பட்டது. இதைதொடர்ந்து விளாத்திகுளம் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், பாலத்தின் இருபுறத்திலும் பக்கவாட்டு தடுப்பு சுவர்களை புதுப்பித்து கட்டியுள்ளனர். இதனால் இந்த பாலத்தில் நீடித்து வந்த விபத்து அபாயம் நீங்கியுள்ளது. இதுகுறித்து செய்தி வெளியிட்ட தினத்தந்தி நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்து கொண்டுள்ளனர்.  

Tags:    

மேலும் செய்திகள்