'தினத்தந்தி' புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

Update: 2022-06-12 16:49 GMT

சிமெண்டு மூடி அமைக்கப்படுமா?

எரியோடு போலீஸ் நிலையம் எதிரே சாலையோரத்தில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்த குழாயில் பொருத்தப்பட்ட வால்வை சுற்றிலும் தொட்டி போன்று கட்டப்பட்டுள்ளது. ஆனால் மேல்புறத்தில் சிமெண்டு மூடி முறையாக அமைக்கப்படவில்லை.

இதனால் பாதி திறந்த நிலையில் உள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே வால்வு அமைந்துள்ள இடத்தில் சிமெண்டு மூடி அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

-லட்சுமணன், எரியோடு.

போக்குவரத்து நெரிசல்

திண்டுக்கல் காந்திமார்க்கெட் பகுதியில் கனரக வாகனங்கள் அதிக அளவில் வந்து செல்கின்றன. சில வாகனங்கள் கடைகளின் முன்பு நீண்ட நேரம் நிறுத்தப்பட்டு பொருட்கள் இறக்கி வைக்கப்படுகிறது. இதனால் காந்திமார்க்கெட் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க வேண்டும்.

-கண்ணன், திண்டுக்கல்.

குடிநீர் குழாயில் உடைப்பு

கோபால்பட்டியில் இருந்து திண்டுக்கல் செல்லும் சாலையில் சாணார்பட்டி வேளாண்மை அலுவலகம் அருகே சாலையோரத்தில் பதிக்கப்பட்ட குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. குழாய் உடைப்பை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்ய முன்வர வேண்டும்.

-வாசன், கோபால்பட்டி.

வேகத்தடை வேண்டும்

பழனி அடிவாரம் இடும்பன் கோவில் ரோட்டில் பாட்டாளி தெரு பிரிவில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதன் காரணமாக அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே வேகத்தடை அமைக்க வேண்டும்.

-கார்த்தி, அடிவாரம்.

Tags:    

மேலும் செய்திகள்