தினத்தந்தி புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ்- அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-06-10 19:40 GMT

குண்டும், குழியுமான சாலை

ராமநாதபுரம் மாவட்டம் சுவாமி விவேகானந்தர் தெரு பெரிய பள்ளிவாசல் சந்தில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் அவதிப்படுகின்றனர். ஒரு சிலர் வாகனங்களில் இருந்து நிலை தடுமாறி கீேழ விழுந்து விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. மேலும் சேதமடைந்த சாலையில் பயணிப்பதால் வாகனங்களும் அவ்வப்போது பழுதாகின்றது. எனவே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரம்.

கருவேல மரங்கள் அகற்றப்படுமா?

மதுரை மாவட்டம் விளாங்குடியிலிருந்து பரவை மார்க்கெட் செல்லும் மெயின்சாலையின் இருபுறங்களிலும் கருவேலமரங்கள் அதிக அளவில் வளர்ந்துள்ளன. இவ்வாறு வளர்ந்த மரங்களினால் பஸ்சில் பயணிப்பவர்கள், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் வாகனஓட்டிகள் மரத்தின் மீது மோதி விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையின் இருபுறங்களிலும் உள்ள கருவேலமரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிரபு, மதுரை.

சேதமடைந்த நீர்தேக்க தொட்டி

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் கஞ்சம்பட்டி கிராமத்தில் பள்ளி அருகில் உள்ள நீர்தேக்க தொட்டி சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது. நீர்தேக்க தொட்டியின் சில பகுதிகளில் விரிசல் ஏற்பட்டதுடன், சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. எனவே சேதமடைந்த நீர்தேக்க தொட்டியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனந்த், திருச்சுழி.

குடிநீர் தட்டுப்பாடு

ராமநாதபுரம் மாவட்டம் நகர் மற்றும் புறநகர் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு வாரத்தில் குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகின்றது. வழங்கப்படும் குடிநீரும் போதுமானதாக இல்லை. இதனால் மக்கள் குடிநீரை காசு கொடுத்து வாங்கி குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பகுதியில் வாரத்தின் அனைத்து நாட்களும் சீரான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெற்றி, ராமநாதபுரம்.

ஆக்கிரமிப்பு

சிவகங்கை மாவட்டம் வேதியரேந்தல் தடுப்பணையிலிருந்து நெட்டூர் கண்மாய்க்கு செல்லும் கால்வாயில் கருவேல மரங்களின் ஆக்கிரமிப்பு அதிக அளவில் உள்ளது. இதனால் கால்வாயிலிருந்து நீர் பிற கண்மாய்க்கு செல்ல முடியவில்லை. மேலும் கால்வாயிலிருந்து பிற கண்மாயிகளுக்கு தண்ணீர் வராததால் மக்கள் குடிநீரின்றி அவதியடைவதோடு விவசாய பணிகளும் பாதிக்கப்படுகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கால்வாய் வளர்ந்துள்ள கருவேல மரங்களை உள்ளிட்ட ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

மதியழகன், சிவகங்கை.

நிரம்பி வழியும் பாதாள சாக்கடை

மதுரை மாவட்டம் கிருஷ்ணாபுரம் நெசவாளர் காலனி பிரதான சாலையில் பாதாள சாக்கடை நிரம்பி கழிவுநீர் வெளியேறி வருகின்றது. இதனால் சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் சிரமப்படுகின்றனர். மேலும் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடுடன் காணப்படுகின்றது. இதனால் தொற்றுநோய் பரவ வாய்ப்பு உள்ளது. எனவே பாதாள சாக்கடையில் தேங்கிய கழிவுநீரை வெளியேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மணி, மதுரை.

எரியாத தெருவிளக்கு

மதுரை மேல அனுப்பானடி செல்லும் சாலையில் ரெயில்வே கேட் உள்ளது. இங்குள்ள மின் விளக்கு பல நாட்களாக எரியாமல் உள்ளது. இதனால் இந்த பகுதி இரவு ேநரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகின்றது. இருட்டை பயன்படுத்தி வழிப்பறி போன்ற சம்பவங்களும் நிகழ வாய்ப்பு உள்ளது. எனவே தெரு விளக்க சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிவா, மதுரை.

வாகனஓட்டிகள் அவதி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் யூனியன் அலுவலகம் பகுதியில் உள்ள சாலை சேதமடைந்து மேடு, பள்ளமாக உள்ளது. போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள இந்த பகுதியில் சேதமடைந்த சாலையில் பயணிக்க முடியாமல் வாகனஓட்டிகள் அவதியடைகின்றனர். மேலும் சாலையில் பயணிப்பதால் சிறு, சிறு விபத்துகளும் நிகழ்ந்து வருகின்றது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

முருகன், ராஜபாளையம்.

தொற்றுநோய் அபாயம்

மதுரை மாவட்டம் பீ.பீ.குளம் காவலர் குடியிருப்பு பகுதியில் அதிகமாக குப்பைகள் கொட்டப்படுகின்றன. குப்பைகளை அகற்றாததால் இப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்படுகின்றது. மேலும் இதன் மூலம் ெகாசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய்களும் பரவும் வாய்ப்பு உள்ளது. எனவே இப்பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மோகன், மதுரை.

Tags:    

மேலும் செய்திகள்