தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
குறைந்த மின்னழுத்தத்தால் மின் சாதனங்கள் பழுது
திருச்சி விமான நிலையம் செம்பட்டு மின் நிலையத்திற்கு உட்பட்ட மருவூர் அரசிநகர், ஏர்.ஆர்.எஸ்.நகர், எஸ்.பி.ஐ.ஓ.ஏ. பள்ளிக்கூடபகுதிகளில் குறைந்த மின்னழுத்தத்தால் வீடுகளில் உள்ள பிரிட்ஜ், டி.வி., மிக்சி, மின் மோட்டார்கள் இயங்காமல் பழுதாகிவிடுகின்றன. குறைந்த மின் அழுத்தம் பற்றி இந்த பகுதி மக்கள் புகார் செய்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த பகுதியில் வீடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் அங்கு 10 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட மின்மாற்றி உள்ளது. அதனால் தான் குறைந்த மின்னழுத்தத்தால் மின்சார சாதனங்கள் பழுதாகின்றன. அதனால் மருவூர் அரசிநகர் பகுதியில் கூடுதல் திறன் கொண்ட மின்மாற்றி அமைத்து இப்பகுதியில் உள்ள பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், மருவூர்அரசிநகர்.
பூட்டியே கிடக்கும் சுகாதார வளாகம்
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம் பச்சபெருமாள்பட்டி ஊராட்சியில் ஊரக வளர்ச்சித் துறை மற்றும் ஊரகத்துறை சார்பில் 2020-21 திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் பச்சபெருமாள்பட்டி பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சமுதாய சுகாதார வளாகம் கட்டப்பட்டது. பின்னர் மின் இணைப்பு, தண்ணீர் வசதி ஏற்படுத்தப்பட்டு பூட்டியே கிடக்கிறது. இதனால் பொதுமக்கள் அதனை பயன்படுத்த முடியாவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த சுகாதார வளாகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதமக்கள், பச்சபெருமாள்பட்டி.
குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்படுமா?
திருச்சி மாவட்டம், லால்குடி கல்விக்குடி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் ஏற்பட்டு அப்பகுதி பொதுமக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து ஓராண்டுக்கு மேல் ஆவதால் தற்போது குடிநீர் கலங்களாக வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், கல்விக்குடி.
சேதமடைந்த கழிவறை கட்டிடம்
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், மலையப்பபுரம் கிழத்தெருவில் பெண்களுக்கான கழிவறை கட்டப்பட்டு பயன்படுத்தி வந்தனர். தற்போது கழிவறையின் கட்டிடம் சேதமடைந்து எப்போது வேண்டுமானும் கீழே விழும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சேதமடைந்த கழிவறையின் கட்டிடத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
பொதுமக்கள், மலையப்பபுரம்
பாலத்தின் கீழ் வழியாக பஸ் இயக்க கோரிக்கை
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகா, நாகமங்கலம் பஞ்சாத்துக்குட்டபட்ட ஆலம்பட்டி ரோடு பஸ் நிறுத்தத்தில் இருந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் மூலம் தினமும் மதுரை, கொட்டாம், துரங்குறிச்சி, பொன்னமராவதி, விராலிமலை போன்ற ஊர்களுக்கு திருச்சி தீரன்மாநகர், வி.ஏ.டி. நகர் குடியிருப்புகளில் உள்ள பொதுமக்கள், அரசு அலுவலர்கள், பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள், சாய்பாபா கோவிலுக்கு வரும் பக்தர்கள் சென்று வந்தனர். தற்போது ஆலம்பட்டி ரோட்டில் புதிதாக பாலம் கட்டப்பட்டுள்ளதால், பஸ்கள் அனைத்தும் பாலத்தின் மேல் பகுதி வழிகயாக சென்று விடுகிறது. இதனால் கீழே ஆலம்பட்டி ரோடு பஸ் நிறுத்தத்தில் நிற்கும் பயணிகள், பொதுமக்கள், மாணவ-மாணவிகள் அரை கிலோ மீட்டர் வரை நடந்து சென்று பஸ் ஏற வேண்டியது உள்ளது. இதனால் அனைவரும் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ்கள் அனைத்தையும் பாலத்தின் கீழ் வழியாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.
பொதுமக்கள், நாகமங்கலம்.