தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-;

Update:2022-09-30 00:33 IST

சாலையை ஆக்கிரமித்துள்ள செடி-கொடிகள்

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்துள்ள பச்சமலை புத்தூரில் இருந்து, குண்டக்காடி, நச்சிலிப்பட்டி, கருவங்காடு வழியாக பூதக்கால் செல்லும் சாலை இருபுறமும் செடி கொடிகள் ஏராளமானவை முளைத்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக பஸ்கள், வாகன ஓட்டிகள் எதிரே வாகனம் வரும் பொழுது மிகவும் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

சுப்பிரமணி, பச்சமலை.

ஆபத்தை நோக்கி உயர் மின்அழுத்த கோபுரம்

திருச்சி மாவட்டம், தா.பேட்டை ஒன்றியம், பவித்திரம் ஏரியில் உள்ள உயர் மின் அழுத்த கோபுரத்தில் செடிகொடிகள் படர்ந்து வளர்ந்து வருகிறது. இனிரும் மழைகாலங்களில் ஏரியில் நீர் நிரம்பினால், செடிகொடிகள் வளர்ந்து மின்கம்பிகளை தொடும் பட்சத்தில் விபத்து ஏற்பட அதிகமான வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் முன்னெச்செரிக்கையாக நடவடிக்கையாக செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், பவித்திரம்.

கருவேலமரங்களால் வாகன ஓட்டிகள் அவதி

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் இருந்து வண்ணத்துப்பூச்சி பூங்கா செல்லும் வழியில் சாலையின் இருபுறங்களில் கருவேல மரங்கள் முளைத்துள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்களில் விபத்தில் சிக்கி கொள்கின்றன. மேலும் ஒரு வாகனம் சென்றால் எதிர் திசையில் இருந்து மற்றொரு வாகனம் வரவில்லை. இதனால் தினமும் வாகன ஓட்டிகள் கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், ஸ்ரீரங்கம்.

குடிநீர் வராததால் மக்கள் அவதி

திருச்சி மாநகராட்சி 56-வது வார்டுக்குட்பட்ட பிராட்டியூர் காவேரிநகர் பகுதியில் கடந்த 15 நாட்களாக குடிநீர் வராததால் அந்த பகுதி மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்பட சுமார் 600 வீடுகள் அந்த பகுதியில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை பணிகள் நடைபெற்றது. இதனால் குடிநீர் குழாய் இணைப்பு தடைபட்டு விட்டதால் குடிநீர் வராததற்கு காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆகவே அந்த பகுதியில் குடிநீர் தங்கு தடையின்றி சீராக வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜா, திருச்சி.

பள்ளியின் சுற்றுச்சுவர் கட்டி முடிக்கப்படுமா?

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஒன்றியம், பச்சபெருமாள்பட்டி ஊராட்சி, வைரபெருமாள்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் பள்ளியின் சுற்றுசுவர் கட்டும் பணிகள் கடந்த ஓராண்டுக்கு முன்பு தொடங்கி இன்னும் நடந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுற்றுச்சுவரை விரைந்து கட்டி மாணவ-மாணவிகளின் பயன்பாட்டிற்கு விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், வைரபெருமாள்பட்டி.

Tags:    

மேலும் செய்திகள்