தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-09-26 18:45 GMT

பழுதடைந்த மின்கம்பம் மாற்றப்படுமா ?

அரியலூர் மாவட்டம், முனியங்குறிச்சி கிராமம் எம்.ஜி.ஆர். நகர் நுழைவாயிலில் ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக இந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், முனியன் குறிச்சி.

குண்டும், குழியுமான சாலை 

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் இருந்து இறவாங்குடி, அய்யப்பன் நாயகன் பேட்டை மற்றும் பாப்பாக்குடி வழியாக காட்டுமன்னார்குடி வரை அரசு டவுன் பஸ் ஒன்று சென்று வருகிறது. இந்தநிலையில் இறவாங்குடியில் இருந்து அய்யப்பன் நாயகன் பேட்டை வரை சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், மீன்சுருட்டி.

விளம்பர பதாகைகளால் விபத்து ஏற்படும் அபாயம்

அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டியில் திருச்சி சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இங்குள்ள மேம்பாலத்தின் வழியாக அரியலூர் முத்துவாஞ்சேரி செல்லும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் வி.கைகாட்டி மேம்பாலம் மற்றும் சர்வீஸ் சாலையை ஒட்டி உள்ள சுவற்றில் பல்வேறு வகையான விளம்பர பாதாகைகள் ஒட்டப்பட்டுள்ளது. சில நேரங்களில் விளம்பர பதாகைகள் காற்றில் பறந்து வாகன ஓட்டிகளின் முகத்தில் விழும் சூழல் உள்ளது. மேலும் சாலையோரங்களில் நின்று கொண்டு கால்நடைகள் பதாகைகளை தின்று விடுகிறது. இதனால் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதியில் அதிகளவில் விபத்துக்கள் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், வி.கைகாட்டி.

நிழற்குடைக்குள் புகும் மழைநீர்

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் உஞ்சினி கிராமத்தில் பயணிகள் நிழற்குடை ஒன்று உள்ளது. இப்பகுதியில் தொடர் மழை பெய்தால் பயணிகள் நிழற்குடையின் உள்பகுதியில் மழைநீர் புகுந்து விடுகிறது. இதனால் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகள் நிழற்குடைக்குள் மழைநீர் புகாத வண்ணம் உயர்த்தி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், உஞ்சினி.

எரியாத மின்விளக்குகள்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் திருச்சி மார்க்கம் செல்லும் பஸ்கள் நிற்கும் பகுதியில் 4 மின்கம்பங்கள் உள்ளது. இதில் ஒன்றும் இரவு நேரங்களில் எரிவதில்லை. இதனால் இரவு நேரத்தில் அங்கு வரும் பயணிகள் கடும் அவதி அடைந்து வகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எரியா மின்விளக்குகளை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், ஜெயங்கொண்டம். 

Tags:    

மேலும் செய்திகள்