தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-07-12 16:58 GMT

கருவேலமரங்களை அகற்ற கோரிக்கை

புதுக்கோட்டை மாவட்டம் பெருமருதூர் - மணமேல்குடி சாலையில் கீரனூர் கண்மாய் உள்ளது. இந்த கண்மாயில் இருந்து மணமேல்குடி வரை சாலையோரத்தில் அதிகளவில் கருவேல மரங்கள் முளைத்துள்ளது. இதனால் வாகனங்களில் செல்வோர் மற்றும் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கருவேல மரங்களை அகற்றி இருவழி சாலையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

சுரேஷ், மணமேல்குடி

தேங்கி நிற்கும் கழிவுநீர் 

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தெற்குதெருவில் பழைய சொசைட்டி கட்டிடம் உள்ளது. இதன் சாக்கடையில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த வழியாக நடந்து செல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தேங்கி நிற்கும் கழிவுநீரை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

பொதுமக்கள், விராலிமலை.

Tags:    

மேலும் செய்திகள்