'தினத்தந்தி' புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
சிதிலமடைந்த சிவன் கோவில்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம், கொளக்காநத்தம் அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவாலயம் சோழர் காலத்தில் கட்டப்பட்டது. தற்போது இந்த சிவாலயம் சிதிலமடைந்து வழிபாடு இல்லாமல் உள்ளது. கோவில் நிலங்கள் சிலரது ஆக்கிரமிப்பில் உள்ளதாக தெரிகிறது. இதனை அறநிலையத்துறை அதிகாரிகள் கண்டு கொள்வதுஇல்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
பொதுமக்கள், கொளத்தூர், பெரம்பலூர்.