தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-06-06 18:08 GMT

இணைப்பு சாலை அமைக்கப்படுமா?

பெரம்பலூரில் வடக்கு மாதவி சாலையில் உழவர் சந்தை உள்ளது. இந்த சாலையில் தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. செவ்வாய்க்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுவதால் இருபுறமும் வாகனங்கள் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளாகின்றன. இந்த போக்குவரத்து நெரிசலை தவிர்க்க உழவர் சந்தை எளம்பலூர் சாலையை இணைக்கும் வகையில் உழவர் சந்தை அருகே தார் சாலை அமைத்து போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினால் வடக்கு மாதவியின் சாலையிலிருந்து நகருக்கு மற்றும் வெளி பகுதிகளுக்கு சென்று வரும் வாகனங்களின் ஓட்டுனர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கும், நடந்து செல்லும் பொதுமக்களுக்கு மிகுந்த வசதியாக இருக்கும். இதனை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

முருகன், பெரம்பலூர்.

அரசு பஸ் இயக்க கோரிக்கை

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் இருந்து சிலால் வழியாக நாயகனைப்பிரியாள் கிராமத்திற்கு தினமும் அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் உரிய நேரத்தில் அரசு பஸ் இயக்கப்படாததால் பொதுமக்கள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் மதியம் 1.30 மணிக்கு தா.பழூர் செல்லும் பஸ்சும் இயக்கப்படவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

சேகர், அரியலூர்.

Tags:    

மேலும் செய்திகள்