தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2022-06-05 19:33 GMT

டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு

புதுக்கோட்டை மாவட்டம், வடவாளம் ஊராட்சியில் இச்சடி கிராமத்தில் இருந்து கும்மிபட்டி முத்துக்கோன்பட்டி செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டால் இப்பகுதியில் உள்ள பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் அமைய உள்ள டாஸ்மாக் கடையை வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், வடவாளம், புதுக்கோட்டை.

நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்கப்படுமா?

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் இருந்து பிலா விடுதி, கூத்தம்பட்டி, பட்டம்மா விடுதி, செவ்வாய்பட்டி வழியாக பட்டுக்கோட்டைக்கு புதிய வழித்தடத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பஸ் இயக்கப்பட்டது. தற்போது இந்த பஸ் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் வெளியூர் செல்ல பஸ் வசதி இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

கோவிந்தராஜ், பட்டம்மாவிடுதி, புதுக்கோட்டை. 

Tags:    

மேலும் செய்திகள்