தினத்தந்தி செய்தி எதிரொலி: அரசு பள்ளி அருகே வேகத்தடை அமைப்பு
தினத்தந்தி செய்தி எதிரொலியாக அரசு பள்ளி அருகே வேகத்தடை அமைக்கப்பட்டது.;
கரூர் மாவட்டம், ஜெகதாபி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்களின் பலரும் பல்வேறு பகுதிகளில் இருந்து பஸ் மூலம் பள்ளிக்கு வந்து செல்கின்றனர். பஸ்சில் இருந்து இறங்கி பள்ளிக்கு செல்லவும், பின் பஸ் ஏறவும் அதிகப்படியான வாகனங்கள் செல்லக்கூடிய சாலையை கடக்க வேண்டிய நிலை இருந்தது. அந்த பகுதியில் வேகத்தடை எதும் இல்லாததால் சாலையில் அதிவேகமாக வாகனங்கள் சென்று வரும் சூழ்நிலையில் மாணவ-மாணவிகள் ஆசிரியர்களுக்கு ஆபத்து ஏற்படக்கூடிய நிலை இருந்தது. இதுகுறித்து பெற்றோர்களின் கோரிக்கையாக அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என தினத்தந்தியில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இதை பார்த்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு பள்ளி அருகே வேகத்தடை அமைத்துள்ளனர். இதனையடுத்து நடவடிக்ைக எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.