மாண்டஸ் புயல் - மாலைக்கு பிறகு போலீசார் தீவிர ரோந்து - சென்னை போலீஸ் கமிஷனர் பேட்டி

புயல் கரையை கடக்கும் முன்பாகவே மீட்பு குழுவினர் தேவையான இடங்களுக்கு அனுப்பப்பட உள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.;

Update:2022-12-09 14:34 IST

சென்னை,

180 கி.மீ. தொலைவில் மாண்டஸ் புயல் நிலை கொண்டுள்ளது. சென்னையில் இருந்து 180 கி.மீ. தொலைவில் புயல் நிலை கொண்டுள்ளது. இன்று நள்ளிரவு மாண்டஸ் புயல் கரையை கடக்கும் எனவும் இன்று மதியம் முதல் காற்றின் வேகம் அதிகரிக்கும் எனவும் கரையை கடந்த 3 மணி நேரத்தில் புயல் வலுவிழக்கும் எனவும் மணிக்கு 70 கி.மீ. வேகம் வரை காற்று வீச கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

சென்னையில் இன்று மாலைக்கு பிறகு தீவிர ரோந்து பணியில் போலீசார் ஈடுபடுவார்கள். மாண்டஸ் புயல் கரையை கடக்க உள்ளதால் தேவையில்லாமல் பொதுமக்கள் வெளியே வருவதை தடுக்க ரோந்து பணியை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். தேவையான மீட்பு உபகரணங்களும் தயார் நிலையில் உள்ளன. மருத்துவ குழுக்கள், அவசர உதவிக்கான குழுக்கள் என அனைவரும் தயாராக உள்ளனர். புயல் கரையை கடக்கும் முன்பாகவே மீட்பு குழுவினர் தேவையான இடங்களுக்கு அனுப்பப்பட உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்